Wednesday, September 25, 2024

பிரதோஷ வழிபாடு இல்லாத சிவன் கோயில்!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

பிரதோஷ வழிபாடு இல்லாத சிவன் கோயில்!பிரதோஷ வழிபாடு இல்லாத சிவன் கோயில் இதுதான்.பிரதோஷ வழிபாடு மூர்த்தி

பெருமாள் கோயில்களில் தீர்த்தம் மூன்று முறை தரப்படுகிறது. செயல்களில் வெற்றி பெறுவதற்குத் தரப்படுவது முதல் முறை. நெறியைக் கடைப்பிடித்து வாழ்வதற்கு இரண்டாம் முறையும், மெய்பொருளான இறைவனைக் காண்பதற்கு மூன்றாம் முறையும் வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட குஜிலியம்பாறை அருகேயுள்ள ராமகிரி என்ற தலத்தில் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுவதில்லை. இந்த தலத்தில் உள்ள வாலீஸ்வரருக்கு நந்தி பிரதிஷ்டை கிடையாது. பக்த ஆஞ்சநேயர் விக்கிரகம்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இரு நந்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தாலும், அவை கோயிலுக்கு வெளியே உள்ளன. பிரதோஷ வழிபாடு இல்லாத சிவன் கோயில் இதுதான்.

கோவை காரமடை அருகேயுள்ள மருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமந்த சுவாமி கோயிலில் மூலவர் அனுமந்த சுவாமி, ஸ்ரீராமனின் பக்தராகக் கரம் குவித்து வணங்கும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவரை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் வளம் பெறுவதால், "ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர்' என போற்றப்படுகிறார்.

திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் கோயிலில்தான் சனி பகவானுக்கு ஈஸ்வரர் பட்டம் கிடைத்தது. இவரது கையில் வழக்கத்துக்கு மாறாக, கும்பம் இருக்கும். இங்கு மட்டும் நவக்கிரங்கள் "ப' வடிவில் அமைந்திருக்கும்.

சீர்காழி-பூம்புகார் வழித்தடத்தில் உள்ள தலச்சங்காடு எனும் ஊரில் சங்கவனேஸ்வரர் கோயில் மூலவர் சங்கு போன்ற அமைப்பில் காட்சி அளிக்கிறார். இந்தத் தலத்தில் வழிபட்டு பாஞ்சஜன்ய சங்கை திருமால் பெற்றதாக ஐதீகம். பத்மா சாரதி, தஞ்சாவூர்.

ராஜஸ்தான் மாநிலத்துக்கு உள்பட்ட ஆரவல்லி பள்ளத்தாக்கில் உள்ள ஆதிநாதர் கோயில் நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில்களில் ஒன்று. இங்கு 1,444 தூண்கள் உள்ளன. காலையில் சூரிய ஒளி இத்தூண்களில் படும்போது, ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு நிறமாகத் தென்படும் அதிசயம் நிகழ்கிறது.

பாலக்காடு அருகே கல்பாத்தி எனும் ஊரில் விசுவநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதத்தில் மாபெரும் தேரோட்டம் நடைபெறுகிறது. புரி ஜெகநாத சுவாமி கோயில் தேரோட்டத்துக்குப் பிறகு இதுதான் பெரியது. ஆறு சக்கரத் தேரை யானைகள் இழுப்பது சிறப்பானது.

மகாலெஷ்மி சுப்பிரமணியன், காரைக்கால்.

You may also like

© RajTamil Network – 2024