Saturday, September 21, 2024

கிராமப்புற சாலைகள் எல்லாம் அடியோடு மாறப்போகுது… அசத்தல் திட்டம்!

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

கிராமப்புற சாலைகள் எல்லாம் அடியோடு மாறப்போகுது… மத்திய அரசின் அசத்தல் திட்டம்!கிராமப்புற சாலைகள் எல்லாம் அடியோடு மாறப்போகுது... மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் பல பகுதிகளுக்கு இடையிலான இணைப்புகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் பல விரைவுச் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் பல பெரிய நகரங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த இலையில் அடுத்த கட்டமாக நாட்டில் இருக்கும் கிராமங்களுக்கு இடையிலான இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது. சிறந்த போக்குவரத்துக்கு கட்டமைப்பை ஏற்படுத்தி கிராமங்களை இணைப்பதன் மூலம், கிராமப்புறங்களுக்கு நல்ல சாலைகள் கிடைப்பதோடு, பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையை குறைக்க அரசு நோக்கம் கொண்டுள்ளது.

விளம்பரம்

இதற்காக பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலை இணைப்புக்கு பெரிய அளவில் நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கிராமங்களில் சாலைகள் மறுசீரமைக்கப்பட்டு, கிராமப் பகுதிகளுக்கான இணைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் படி, குறைந்தபட்சம் 300 முதல் 400 பேர் வரையிலான மக்கள் வசிக்கும் கிராமங்கள் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்படும் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

இருப்பினும் இந்த குறைந்தபட்ச மக்கள் தொகை எண் சமவெளி பகுதிகளுக்கு மட்டுமே. மலைப்பாங்கான பகுதிகள், பாலைவனங்கள் மற்றும் பிற பின்தங்கிய பகுதிகள் என்றால் 100 பேர் வரை வசிக்கும் கிராமங்களுக்கும் கூட இணைப்பை மேம்படுத்த நல்ல சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த வரும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. PMGSY-ன் மூன்றாம் கட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் உணர்ச்சிபட பேசிய முகேஷ் அம்பானி… மனைவி குறித்து பெருமிதம்!

கடந்த 2000-ஆம் ஆண்டு PMGSY திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில், சமவெளிப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் நகரங்களுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் மலைப்பாங்கான மற்றும் பாலைவனப் பகுதிகள் என்றால் இந்த எண்ணிக்கை 250 பேர் வசிக்கும் பகுதி கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் PMGSY திட்டத்தின் நான்காவது கட்டம் விரைவில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கைகளின்படி, செயலில் உள்ள இந்த திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்காக அரசாங்கம் இடைக்கால பட்ஜெட்டில் சுமார் ரூ.16,600 கோடி ஒதுக்கியுள்ளது. அடுத்த ஆண்டு நான்காம் கட்டம் தொடங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தென்னிந்திய நடிகைகள்.!
மேலும் செய்திகள்…

PMGSY திட்டத்தில் கிராமப்புறங்களை விவசாய சந்தைகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுடன் கனெக்ட் செய்ய சுமார் 1.25 லட்சம் கிலோமீட்டர் நீள சாலைகள் கட்டமைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள் கிட்டத்தட்ட 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளதாக தெரிகிறது. சாலைகள் அமைப்பதோடு மட்டுமல்லாமல், சாலைகளுக்கு அருகில் மரங்கள், மரக்கன்றுகள் மற்றும் சிறு செடிகள் நடவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
central government
,
Infrastructure Projects

You may also like

© RajTamil Network – 2024