ராஜ்தானி எக்ஸ்பிரஸ் – வந்தே பாரத்… எந்த ரயிலின் ஸ்லீப்பர் பெஸ்ட்?

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் – வந்தே பாரத்… எந்த ரயிலின் ஸ்லீப்பர் பெஸ்ட்? – ஒரு அலசல்ராஜ்தானி எக்ஸ்பிரஸ் - வந்தே பாரத்... எந்த ரயிலின் ஸ்லீப்பர் பெஸ்ட்? - ஒரு அலசல்

இந்திய ரயில்வே கூடிய விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வகையில் நீண்ட தூர பயணத்திற்காக கொண்டு வரப்படுகிறது. இந்த புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் நீண்ட தூர பயணத்திற்கு தேவைப்படும் வேகம் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒருவேளை சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களுக்கு மாற்றாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இந்திய ரயில்வே கொண்டு வரப்போகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் இன்னும் இந்திய ரயில்வே கூறவில்லை.

விளம்பரம்

இந்த சமயத்தில் இரண்டு ரயில்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எது சிறந்ததாக இருக்கும் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ராஜ்தானி எக்ஸ்பிரஸை விட சிறப்பாக செயல்படுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

பயணிகளுக்கான வசதி மற்றும் சிறந்த சூழல்

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் ராஜ்தானியை விட மேல் மற்றும் நடுவில் உள்ள படுக்கைகளை அணுகுவதற்கு படிக்கட்டு அல்லது ஏணி இருக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெட்டியைப் போலவே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டியில் மேம்படுத்தப்பட்ட ஏர் கண்டிஷனிங் மற்றும் தூசி இல்லாத சுற்றுப்புறத்திற்காக முற்றிலும் சீல் செய்யப்பட்ட இடைவழிகள் இடம்பெறும்.

விளம்பரம்

சிறந்த இருக்கை மற்றும் கதவுகள்

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் ராஜ்தானியை விட சிறந்த குஷன் பெர்த்களைக் கொண்டிருக்கும். மேலும் நன்றாக தூங்குவதற்கான சூழலை மேம்படுத்த ஒவ்வொரு பெர்த்தின் பக்கங்களிலும் கூடுதல் குஷனிங் சேர்ப்பது குறித்தும் இந்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது.

அதேபோல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் பயணிகள் உள்ளே வரவும், வெளியேறவும் பயன்படுத்தும் கதவுகள் ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இயங்கும் தானியங்கி கதவுகளே இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமின்றி பெட்டிகளுக்கு இடையில் ஒன்றோடொன்று இணைக்கும் தானியங்கி கதவுகளும் இருக்கின்றன.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்தியாவின் தலைசிறந்த பள்ளி எந்த மாநிலத்தில் உள்ளது தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதுதான்!

வேகம் மற்றும் ஜெர்க் இல்லா சவாரி

மணிக்கு 160 கிமீ வேகம் செல்லும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளதால், வந்தே பாரத் ஸ்லீப்பர் விரைவான ஆக்ஸிலேரேஷன் மற்றும் வேக குறைப்பை கொண்டுள்ளது. இது உங்களின் பயண நேரத்தைக் குறைக்கிறது. மேலும் ராஜதானி எக்ஸ்பிரஸ் உடன் ஒப்பிடும்போது வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகமும் அதிகம்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் வெவ்வேறு இணைப்புகள் மற்றும் வடிவமைப்பு காரணமாக, ராஜ்தானி ரயில்களை விட ஜெர்க் இல்லாத தொல்லையில்லா பயணத்தை அனுபவிப்பார்கள் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

விளம்பரம்

தீ பாதுகாப்பு நடவடிக்கைகள்

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் ராஜ்தானி ரயில்களை விட சிறந்த தீ பாதுகாப்பு வசதிகள் உள்ளன. புதிதாக வரவிருக்கும் ரயிலில், நெருப்பைத் தடுக்கும் E30 தரநிலைகளை சரக்குப் பெட்டிகள் பெற்றுள்ளதால் கேபின் பகுதிக்கு தீ பரவாமல் தடுக்கப்படும். அதேபோல் ஒவ்வொரு பெட்டிகளின் முடிவிலும் தீ தடுப்பு சுவர் கதவுகள் (E15) இருக்கும். இது பெட்டிகளுக்கு இடையே தீ பரவாமல் தடுக்கும்.

இதையும் படிக்க:
த்தரபிரதேச ரயில் விபத்து சதிச்செயலா..? ரயில் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

விளம்பரம்

இஞ்சின் பெட்டிகள் கிடையாது

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களைப் போலல்லாமல், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் சுயமாக இயக்கப்படும் வகையில் இரு முனைகளிலும் ஓட்டுநர் அறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ரயில்களைப் போல இதற்கு இன்ஜின் இருக்காது.

விபத்தை தாங்கும் சக்தி

துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்டால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை விட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் விபத்தை தாங்கும் சக்தி குறைவாகவே உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indian Railways
,
Vande Bharat

You may also like

© RajTamil Network – 2024