எச்சிலை உமிழ்ந்து தயாரிக்கப்பட்ட ரொட்டி… ஆதரவாக சோனு சூட் -கங்கனா ரணாவத் சாடல்!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

எச்சிலை உமிழ்ந்து தயாரிக்கப்பட்ட ரொட்டி… ஆதரவாக சோனு சூட் -கங்கனா ரணாவத் சாடல்!எச்சிலை உமிழ்ந்து ரொட்டி மாவு தயாரித்த கடைக்காரருக்கு ஆதரவாக சோனு சூட் -கங்கனா ரணாவத் சாடல்படம் | ஏஎன்ஐ

சண்டீகர் மாநிலத்திலுள்ள உணவகம் ஒன்றில் அங்குள்ள பணியாளர் ஒருவர் எச்சிலை உமிழ்ந்து ரொட்டி மாவு பிசையும் காட்சி காணொலியாக வெளியாகி பார்வையாளர்களை முகம் சுளிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேச அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, கான்வர் புனித யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள அனைத்து உணவகங்களின் முகப்பிலும், அதன் உரிமையாளர்கள் தங்கள் பெயர்களை கட்டாயம் சுட்டிக்காட்டியிருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, எச்சிலை உமிழ்ந்து ரொட்டி மாவு தயாரித்த கடைக்காரருக்கு ஆதரவாக இந்தி நடிகர் சோனு சூட் கருத்து தெரிவித்திருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.

இச்சம்பவத்தை ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் பகவான் ஸ்ரீராமர், சபரி அளித்த பழங்களை உணவாக்கிக் கொண்ட சம்பவத்துடன் ஒப்பிட்டுள்ளார் சோனு சூட். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ”பகவான் ராமர் சபரியால் வழங்கப்பட்ட கனிகளை உட்கொள்ளும்போது, தன்னால் அந்த ரொட்டிகளை(எச்சில் உமிழ்ந்த மாவால் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளை) ஏன் சாப்பிட முடியாது? வன்முறையை அகிம்சையால் வீழ்த்த முடியும் சகோதரரே, மனிதாபிமானம் இருக்க வேண்டும். ஜெய் ஸ்ரீராம்” எனப் பதிவிட்டுள்ளார் சோனு சூட்.

சோனு சூட்டின் இந்த பதிவுக்கு பலதரப்பினரும் எதிர்மறையாகவும் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சோனு சூட்டை மறைமுகமாக விமர்சித்துள்ள பாஜக எம்.பி. நடிகை கங்கனா ரணாவத், “அடுத்த கட்டமாக, சோனு சூட் கடவுளைக் குறித்தும் மதத்தைப் பற்றியும் தான் சொந்தமாகக் கண்டறிந்துள்ள ஞானத்தைக் கொண்டு, தன் சொந்த ராமாயணத்தை எடுக்கவுள்ளார்” எனக் கேலி செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, உணவில் உமிழ்வோரை தான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை எனக் குறிப்பிட்டு விளக்கமளித்துள்ளார் சோனு சூட். அவர் கூறியிருப்பதாவது, “இதுபோன்ற மனிதர்களின் குணத்தை மாற்ற முடியாது, அவர்களது பழக்கவழக்கம் எப்போதுமே மாறாது. இதுபோன்ற செயல்களுக்காக அவர்களுக்கு கட்டாயம் கடுந்தண்டனை வழங்க வேண்டும்.

மறுபக்கம், மனிதாபிமானம் மனிதாபிமானமாகவே நிலவட்டும் நண்பர்களே. எந்த மாநிலமானாலும், நகரமனாலும், மதமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எனக்கு தெரியப்படுத்தவும்” எனப் பதிவிட்டுள்ளார் சோனு சூட்.

You may also like

© RajTamil Network – 2024