Wednesday, September 25, 2024

ஆளுநர் என்ன மருத்துவரா? ஆம் ஆத்மி அமைச்சர் கேலி!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

ஆளுநர் என்ன மருத்துவரா? ஆம் ஆத்மி அமைச்சர் கேலி!அரவிந்த் கேஜரிவால் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் கேஜரிவால்கோப்புப்படம் | ஏஎன்ஐ

தில்லி அரசின் மதுபானக் கொள்கை விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது தில்லி திகார் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கேஜரிவால் தொடர்ந்து உடல் எடை குறைந்து வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேஜரிவாலுக்கு நீரிழிவு பாதிப்பு உள்ள நிலையில், அவர் முறையாக உணவுகளையும் மருந்துகளையும் எடுத்துகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அரவிந்த் கேஜரிவால் உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணிக்க தில்லி தலைமைச் செயலருக்கு தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சாக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளபடி, கேஜரிவால் உணவுகளையும் மருந்துகளையும் உட்கொள்வதில்லை என்றும், அவருக்கு வீட்டில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டபோதிலும், குறைந்த அளவு கலோரி உள்ள உணவுகளையே அவர் எடுத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், கேஜரிவால் இன்சுலின் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தவும் சிறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சாக்சேனா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, ஆளுநர் என்ன மருத்துவரா? என ஆம் ஆத்மி அமைச்சர் கேலி செய்துள்ளார். தில்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் பேசியிருப்பதாவது, துணைநிலை ஆளுநர் சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகவே அறிவேன். ஆனால், அவர் மருத்துவர் என்பதை அறிந்திருக்கவில்லை.

அவர் இதுவரை ஒருமுறைகூட தேர்தலில் போட்டியிடவில்லை. அப்படி போட்டியிட்டிருந்தால் வேட்புமனு மூலம் அவரது முழுவிவரங்களை அறிந்திருக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

மத்திய அரசு கேஜரிவாலின் உடல்நிலையை கருத்திற்கொள்ளவில்லை என ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024