Wednesday, September 25, 2024

கோவை, நீலகிரியில் இன்றும் கனமழை பெய்யும்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

கோவை, நீலகிரியில் இன்றும் கனமழை பெய்யும்!மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..கனமழை அறிவிப்பு

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் 2 நாள்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,

நேற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் ஒரிசா கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகில் நிலவுகறிது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் சத்திஸ்கர் இருகில் அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வலுவிழக்கக்கூடும்.

மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும்,

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கோவை, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் கனமழை பெய்யது வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 – 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்..

இன்று(ஜூலை 20) மன்னார் வளைகுடா மற்றம் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024