ஹைதராபாத்தில் விடாது கொட்டித்தீர்த்த மழை! போக்குவரத்து பாதிப்பு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

ஹைதராபாத்தில் விடாது கொட்டித்தீர்த்த மழை! போக்குவரத்து பாதிப்புவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் ஸ்தம்பித்தது ஹைதராபாத்படம் | பிடிஐ

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. ஹைதராபாத்தில் சனிக்கிழமை(ஜூலை 20) காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. மாநகரின் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மாலை வேளையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களிலிருந்து வீடுகளுக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளனர்.

மாலை 3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மாநகரில் பதிவாகியுள்ள மழையளவு,

  • குத்புல்லாபூர் பகுதியில் 19.5 மில்லிமீட்டர்,

  • ஜூபிளி ஹில்ஸ்(19.3 மி.மீ.),

  • யூசுஃப்குடா(19 மி.மீ.),

  • கர்வான்(18.8 மி.மீ.),

  • குகாட்பள்ளி(18.5 மி.மீ.),

  • சந்திரயான்கட்டா(18 மி.மீ.) பகுதிகளில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெலங்கானா மேம்பாட்டு திட்ட சங்கம்(டிஜிடிபிஎஸ்) தெரிவித்துள்ளது. இதனிடையே அங்கு தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடுமென வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

தொடர்மழையால் ஹைதரபாத்திலுள்ள ஹுசைன் சாகர் ஏரியில் நீர் இருப்பு மொத்த கொள்ளளவை எட்டவுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி ஏரியில் 513.21 மீட்டர் நீர் இருப்பு உள்ள நிலையில், அதன் முழு கொள்ளளவான 513.41 மீட்டரை விரைவில் எட்டிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024