Saturday, September 28, 2024

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்.. யார் தெரியுமா?

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்… எவ்வளவு தொகை தெரியுமா?இந்திய பட்ஜெட்

இந்திய பட்ஜெட்

ஆங்கிலேய ஆட்சியில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, 1860ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் பட்ஜெட்டை இந்திய வைஸ்ராய் நிர்வாகக் குழுவின் நிதி உறுப்பினராக இருந்த, ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பட்ஜெட்டை 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்றைய மத்திய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார். முதல் பட்ஜெட் மாலை 5 மணிக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

விளம்பரம்

தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார், தான் பட்ஜெட்டுக்கெல்லாம் முன்னோடி. பிரதமராக இருந்த நேரு அமைச்சரவையில் ஓராண்டு காலம் மட்டுமே நிதியமைச்சராக இருந்தவர். வரலாற்று சிறப்புமிக்க வகையில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வது தனக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம் என தனது உரையில் சண்முகம் செட்டியார் கூறினார். மேலும், தேவைக்கு அதிகமாக வாங்கி குவிப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதாக கவலை தெரிவித்தார்.

இதையும் படிக்க:
உலகின் மிக இளம் கோடீஸ்வரரான 19 வயது சிறுமி: இவரின் சொத்து எவ்வளவு தெரியுமா?

விளம்பரம்

முதல் பட்ஜெட், 197.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மொத்த செலவில், பாதுகாப்புக்காக 92.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்த வருவாய் 171.15 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாணயத்தை பயன்பாட்டில் கொண்டிருக்கும் என்று இந்த பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் முதல் பட்ஜெட் ஏழு மாதங்களுக்கு மட்டுமே ஆன இடைக்கால பட்ஜெட் ஆகும். சண்முகம் செட்டியாரே “இடைக்கால பட்ஜெட்” என்ற சொல்லை உருவாக்கித் தந்தவர். பிறகு ,மக்களவை தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில், இடைக்கால பட்ஜெட் என்பது இந்தியாவில் வழக்கமான நடைமுறையாக மாறியது.

விளம்பரம்

இதுவரை இந்தியாவில் 77 முழு பட்ஜெட்டுகளும் 15 இடைக்கால பட்ஜெட்டுகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்ததில் 92 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Budget 2024
,
Union Budget
,
Union Budget 2024

You may also like

© RajTamil Network – 2024