Saturday, September 21, 2024

மல்லிகார்ஜுன கார்கே பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

மல்லிகார்ஜுன கார்கே பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கோப்புப் படம்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், உங்கள் வளமான அனுபவமும் திறமையான தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக உள்ளன.

சமூகநீதிக்கான உங்களின் அர்ப்பணிப்பும், ஒதுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்கான முயற்சிகளும் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன.

உங்களுடைய முன்னோக்கிய பயணம் வெற்றிகளாலும், தாக்கங்களை ஏற்படுத்தும் பங்களிப்புகளாலும் நிரப்பப்படட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024