Friday, September 20, 2024

டெல் அவிவ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

டெல் அவிவ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி!டெல் அவிவ் நகரில் ஹூதி கிளா்ச்சியாளா்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் பல பகுதிகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிவித்துள்ளது.

ஹூதிக்களின் கோட்டையான யேமன் துறைமுகமான ஹொடைடாவில் இஸ்ரேல் விமானப் படையினர் தாக்குதலை நடத்தினர். கடந்த சில மாதங்களாக நடைபெற்று மோதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

"ஹூதிக்கள் இதுவரை எங்களை 200 முறை தாக்கியுள்ளனர். முதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒருவரை தாக்கியபோது, ​​நாங்கள் அவர்களை தாக்கினோம். தேவைப்படும் இடங்களில் தாக்குதலை நடத்துவோம்" என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஹொடைடா துறைமுகத்தில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

சுமாா் 1,600 கி.மீ. தொலைவிலிருந்து ஏவப்பட்ட அந்த ட்ரோன், இஸ்ரேலின் சக்திவாய்ந்த ‘அயன் டோம்’ வான்பாதுகாப்பு தளவாடங்களின் கண்காணிப்பையும் கடந்து அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பாதுகாப்பு மிக்க பகுதியில் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் போரில் இஸ்ரேலின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மையமான டெல் அவிவ் மீது நடத்தப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினா், காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-இல் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 38,919-ஆக உயா்ந்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024