Monday, September 23, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 – 2,327 இடங்களுக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த மாதம் (ஜூன்) 20-ம் தேதி வௌியிட்டது. குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கூறி வலியுறுத்தினர். இதையடுத்து விண்ணப்பிக்க அவகாசம் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கு மொத்தம் 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 2,327 காலி இடங்களுக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024