Saturday, September 21, 2024

அஞ்சல் அட்டையில் இப்படி ஒரு சாதனையா.. என்னான்னு தெரிஞ்சுக்கோங்க

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

அஞ்சல் அட்டையில் இப்படி ஒரு சாதனையா.. என்னான்னு தெரிஞ்சா நீங்களே அசந்துடுவீங்கநாகார்ஜுன்

நாகார்ஜுன்

ஒரு சிலர் படைக்கும் சாதனைகள் எளிதில் நம்பமுடியாததாகத் தோன்றலாம். ஆனால் ஆங்கில எழுத்துக்களை வெறும் 1.10 மில்லி விநாடிகளில் சொல்ல முடிந்த ஒருவர், அஞ்சல் அட்டையில் ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுக்காவில் உள்ள தகடூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜு என்பவர்தான் இந்த அசாதாரண சாதனைக்குச் சொந்தக்காரர்.

நாகராஜுக்கு வாழ்க்கையில் தெளிவான குறிக்கோள் உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஒருவன் அஞ்சலட்டையில் 10,000 வார்த்தைகளை எழுதிய செய்தியை கேட்டு ஈர்க்கப்பட்டார் நாகராஜூ. இதில் உந்துதல் பெற்ற நாகராஜூ, “I LOVE YOU INDIA” என்ற வார்த்தையை ஒரே அஞ்சலட்டையில், அதுவும் 5,000 தடவைகள் எழுதி, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.

விளம்பரம்

அதோடு மட்டும் நிற்கவில்லை. A முதல் Z வரையிலான ஆங்கில எழுத்துக்களை வெறும் 1.10 வினாடிகளில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்துள்ளார் நாகராஜூ. இந்த சாதனைகளுக்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரண்டிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த நாகராஜூ டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தூரில் வசிக்கும் சைலேஷ் குமார் ஜெயின் என்பவர், ‘ராம்’ என்ற வார்த்தையை ஒரு அஞ்சல் அட்டையில் 12,000 முறை எழுதி சாதனை படைக்க முயன்றார். இந்தூரில் சிறிய அளவில் வீட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் சைலேஷிற்கு 35 வயதாகிறது. காண்ட்வாவைச் சேர்ந்த ஒருவர் தபால் கார்டில் 10,000 எழுத்துகளை எழுதியதைப் பற்றிய செய்தியைப் படித்த பிறகு, தானும் இதுபோல் சாதனை படைக்க வேண்டும் என உத்வேகம் பெற்றார் சைலேஷ்.

விளம்பரம்

‘ராம்’ என்ற வார்த்தையை 12,358 முறை எழுதுவதற்கு 12 நாட்கள் 6 மணிநேரம் செலவு செய்துள்ளார். இவர் வழக்கமாக பயன்படுத்தும் அஞ்சல் அட்டையில் தான் இதை எழுதினார். அஞ்சலடையில் இத்தனை வார்த்தைகளும் எழுத வேண்டும் என்பதால், மிகவும் சிறியதாகவே எழுதப்பட்டுள்ளன. இதை பூதக்கண்ணாடி உபயோகித்தால் மட்டுமே படிக்க முடியும்.

“10-12 நாட்களில் இந்த வார்த்தைகளை எழுதி சாதனை படைக்க முடிவு செய்தேன். என்னால் எவ்வுளவு விரைவாக செய்ய முடிகிறதோ, அவ்வளவு விரைவில் செய்ய விரும்பினேன். இறுதியில் ஒரு வழியாக 12 நாட்களில் என்னால் செய்ய முடிந்தது” என்கிறார் சைலேஷ். இந்த சாதனை முயற்சியில் சைலேஷ் பென்சிலை மட்டுமே பயன்படுத்தினார். ஏனெனில் பென்சிலை பயன்படுத்தி குறைந்த இடத்தில் அதிக வார்த்தைகளை எழுத முடியும் என்பதால் தான்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
India post
,
world record

You may also like

© RajTamil Network – 2024