பட்ஜெட்டுக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

பட்ஜெட்டுக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!ரிலையன்ஸ் மற்றும் கோடக் வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்ததால் பங்குச் சந்தை குறியீடுகள் சரிந்து முடிந்தது.கோப்புப் படம்

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்ததால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்று சரிந்து முடிந்தது.

இந்த நிலையில் ஜூலை 23 அன்று மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் காத்திருப்பு அணுகுமுறையை பின்பற்றியதாலும், உலகளாவிய பங்குச் சந்தைகளில் பலவீனமான போக்கும் முதலீட்டாளர்களின் உணர்வை பாதித்துள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 5 சதவிகிதம் சரிந்ததையடுத்து சென்செக்ஸ் குறியீட்டில் 3 சதவிகிதம் சரிந்துள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கியும் அதன் ஜூன் காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் அதன் பங்குகள் விலை 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது.

ஐடிசி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய பங்குகள் இன்று சரிந்து முடிந்தது. என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் ஏற்றத்தில் முடிந்தது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்து வந்த இந்திய பங்குச் சந்தை, டாப் 30-பங்கு கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 102.57 புள்ளிகள் சரிந்து 80,502.08 ஆக முடிந்தது. இன்றைய வர்த்தக நேரத்தில் பிஎஸ்இ 504 புள்ளிகள் சரிந்து 80,100.65 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.65 புள்ளிகள் குறைந்து 24,509.25 புள்ளிகளாக உள்ளது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 168.6 புள்ளிகள் குறைந்து 24,362.30 புள்ளிகளாக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் 1,969 பங்குகள் ஏற்றத்திலும், 1,567 பங்குகள் சரிந்தும், 111 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமானது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 5 சதவிகிதம் சரிந்ததையடுத்து சென்செக்ஸ் குறியீட்டில் 3 சதவிகிதம் சரிந்துள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கியும் அதன் ஜூன் காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் அதன் பங்குகள் விலை 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது.

ஐடிசி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய பங்குகள் இன்று சரிந்து முடிந்தது. என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் ஏற்றத்தில் முடிந்தது.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் 2024 காலாண்டில் 33.17 சதவிகிதம் உயர்ந்து ரூ.16,474.85 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ மற்றும் ஷாங்காய் ஆகியவை சரிந்து முடிவடைந்தது. அதே நேரத்தில் ஹாங்காங் ஏற்றத்தில் முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.08 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 82.53 டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (வெள்ளிக்கிழமையன்று) ரூ.1,506.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024