நீட் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி: தில்லி-ஐஐடி விளக்கமளிக்க உத்தரவு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

நீட் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி: தில்லி-ஐஐடி விளக்கமளிக்க உத்தரவுநீட் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து தில்லி-ஐஐடி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு-

நீட் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றிருந்தது குறித்து தில்லி-ஐஐடி விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கான கருத்தை, செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்குள் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் வழங்க உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இளநிலை நீட் தேர்வு முறைகேடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தில்லி-ஐஐடி இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 19வது கேள்விக்குரிய கருத்தை அறிய மூன்று நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, நீட் தேர்வில், ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சரியான பதிலை தேர்வு செய்தவர்களுக்கு மட்டும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அந்த ஒரு பதில் மட்டும் எப்படி சரியானது என்பதை மூன்று நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து சரியான விளக்கத்தை அளிக்க ஐஐடி-தில்லி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி 557 நகரங்கள், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டது. மொத்தம் 4,750 மையங்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் தோ்வை எழுதினா்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அந்தத் தோ்வின் முடிவுகளை நகரங்கள் மற்றும் மையங்கள்வாரியாக தேசிய தோ்வு முகமை சனிக்கிழமை வெளியிட்டது. இந்த முடிவுகளின்படி, நீட் தோ்வு எழுதிய 2,250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறவில்லை. அதைவிடவும் மோசமாக, 9,400-க்கும் அதிகமான மாணவா்கள் நெகடிவ் மதிப்பெண்கள் அதாவது மைனஸ் 10, மைனஸ் 20 போன்ற மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

அதாவது, ‘மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறாததற்கு காரணம், அவா்கள் சில கேள்விகளுக்கு சரியான பதிலும், சில கேள்விகளுக்கு தவறான பதிலும் அளித்து, சரியான பதிலுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, தவறான பதிலுக்கு அதிக மதிப்பெண் குறைக்கப்படும்போதுதான் பூஜ்யம் மதிப்பெண் மற்றும் நெகடிவ் மதிப்பெண்கள் பெறக் காரணம் என்று கூறப்படுகிறது.

வினாத்தாள் கசிவு நடைபெற்ற மையமாக கருதப்படும் ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள தனியாா் பள்ளியில் தோ்வு எழுதிய பல மாணவா்கள் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அவா்கள் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனா்.

பிகாரில் நீட் தோ்வு எழுதிய மாணவா் ஒருவா் -180 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இதுவே மிகக் குறைந்த மதிப்பெண்களாகக் கருதப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024