ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்த 12 அடி நீள ராஜநாகம் மீட்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் ராஜநாகம் விடப்பட்டது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியையொட்டி பாலப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக ராஜநாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் படுத்து கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் பாம்பு பிடி வீரர்களுடன் அங்கு சென்றனர். பின்னர் சாமர்த்தியமாக செயல்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி அந்த ராஜநாகத்தை மீட்டு ஒரு சாக்குப்பையில் போட்டனர். தொடர்ந்து சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பிடிபட்டது சுமார் 12 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஆகும். அது உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் சோர்வான நிலையில் இருந்தது. இன சேர்க்கையில் ஈடுபட்டாலும் இதுபோன்று சோர்வுடன் ஒரே இடத்தில் படுத்து இருக்கும். அருகில் விவசாய நிலம் இருப்பததால் பாதுகாப்பு கருதி, அதனை மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024