எக்ஸ்ட்ரா மார்க்ஸ் வேணும்னா இத பண்ணுங்க- ராஜஸ்தான் அரசின் புது முயற்சி

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

எக்ஸ்ட்ரா மார்க்ஸ் வேணும்னா இத பண்ணுங்க… ராஜஸ்தான் அரசின் புதுவித முயற்சி!எக்ஸ்ட்ரா மார்க்ஸ் வேணும்னா இத பண்ணுங்க... ராஜஸ்தான் அரசின் புதுவித முயற்சி!

ராஜஸ்தானில் உள்ள கல்வித்துறை சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது. அதன்படி, மரங்களை நடும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அந்த வகையில், மாணவர்கள் பரீட்சையில் குறைவான மதிப்பெண்களை எடுத்தாலோ அல்லது ஆசிரியர்களின் பெர்ஃபாமன்ஸ் மோசமாக இருந்தாலோ அவர்கள் மரங்களை நடுவதன் மூலமாக தங்களுடைய மதிப்பெண்களை கூட்டிக் கொள்ளலாம்.

இந்த மதிப்பெண்கள் மாணவர்களுடைய மதிப்பெண்களை அதிகரித்து, ஆசிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்திற்கு டிரான்ஸ்ஃபர் வாங்கித் தருவதற்கு உதவுகிறது. ராஜஸ்தானில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் 5 மரங்கள் நடுவதற்கான பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட வேண்டும். மரக்கன்றுகளில் அதனை நட்டு வைத்த மாணவரின் பெயர் மற்றும் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

விளம்பரம்

மாணவர்கள் நட்டு வைக்கும் மரக்கன்றுகளின் எண்ணிக்கையானது அவர்களுடைய ஆனுவல் ரிப்போர்ட் கார்டில் உள்ள மதிப்பெண்களுக்கு நேரடி விகிதாச்சாரத்தில் இருக்கும். ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு புள்ளி வழங்கப்படும். அதே நேரத்தில் ஒரு ஆசிரியர் ஒரு மரக்கன்று நட்டு அந்த மரக்கன்று ஒரு வருடத்திற்கு மேல் பிழைத்துவிட்டால், பின்னர் அந்த மரத்தின் எண்ணிக்கை டிரான்ஸ்ஃபர்களின்போது உருவாக்கப்படும் மொத்த எண்ணிக்கையோடு சேர்க்கப்படும். தற்போது அரசின் முழு கவனமும் மரக்கன்றுகள் நடுவதிலேயே உள்ளது ‘Plant A Tree Get A Number’ என்பதை கல்வித்துறை ஒரு பாலிசியாகவே உருவாக்கியுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
Nipah Virus : நிஃபா வைரஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

இதைத்தவிர பஞ்சாயத்து ராஜ் பிரிவு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படும். இந்நாளன்று மரக்கன்றுகள் நட்டு வைக்கும் அம்ருத் மஹோத்சவத்தை ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா துவங்கி வைப்பார். ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று 200க்கும் அதிகமான மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் கிராமங்களுக்கு உதவுவதற்காக அரசு உதவியாளர் ஒருவரை ஏற்பாடு செய்து கொடுக்கும். மேலும் மரக்கன்றுகள் மீது ஜியோடாகிங் (Geotagging) செய்வதற்கான ஏற்பாட்டையும் அரசு ஏற்றுக்கொள்கிறது.

விளம்பரம்

ராஜஸ்தான் மாநிலத்தை வழிநடத்தி வரும் பாஜக அரசு மாநிலம் முழுவதும் பச்சை போர்வையை விரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. மிகப்பெரிய மரக்கன்றுகள் நடும் முயற்சியின் மூலமாக 7 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டங்களை வைத்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:
473 ஆண்டுகளாக அணையாமல் எரியும் விளக்கு …. எங்க இருக்கு தெரியுமா?

கூடுதலாக மிஷன் ஹரியாலோ ராஜஸ்தானின் கீழ் 5 வருடங்களுக்கு 4,000 கோடி ரூபாய் இதற்காக முதலீடு செய்யப்படும். இதைத்தவிர திரிந்தேத்ரா கணேஷ்ஜி மற்றும் பாண்டுபோலை பார்வையிட வரும் யாத்ரீகர்களுக்கு எலக்ட்ரிக் வாகனம் சார்ந்த போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதன் மூலமாக ராஜஸ்தான் அரசு ரத்தம்பூர் மற்றும் சரீஸ்கா உட்பட புலிகள் சரணாலயங்களில் மாசுபாட்டை குறைக்கவும், கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Education department
,
Rajasthan
,
tree plants

You may also like

© RajTamil Network – 2024