Saturday, September 28, 2024

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக காங்., திமுக அறிவிப்பு!

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு… நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக காங்., திமுக அறிவிப்பு!மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி

மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புறக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில், நடுத்தர மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை எனவும், பெயரளவிற்கு வருமான வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடருக்கு 276 கோடி ரூபாய் மட்டுமே வழங்கிய மத்திய அரசு, பிகார் மாநில வெள்ள தடுப்பு பணிகளுக்காக 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் அநீதி என சாடினார்.

விளம்பரம்

மத்திய பட்ஜெட் அனைத்து மாநிலங்களுக்குமானதாக தெரியவில்லை எனவும், பிகார் மற்றும் ஆந்திர மாநிலங்களை ஆளும் கட்சியினருடனான கூட்டணி ஒப்பந்தம் போல இருப்பதாகவும் முதலமைச்சர் விமர்சித்தார். தொழில் பயிற்சி மையங்கள், தோழி விடுதிகள் போன்ற தமிழ்நாடு அரசின் திட்டங்களை, மத்திய அரசு இரவல் பெற்று பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை எனவும், கோவை, மதுரை மெட்ரோ உள்ளிட்ட புதிய ரயில்வே திட்டங்கள் பற்றியோ, தாம்பரம் – செங்கல்பட்டு மேம்பால விரைவு சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்தோ எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனவும் சாடினார்.

விளம்பரம்

மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவங்களை சிதைக்கும் வகையில் இந்த பட்ஜெட் இருப்பதாகவும் முதலமைச்சர் கடுமையாக விமர்சித்தார். பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, வரும் 27-ஆம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதையும் படிங்க: கோயில் விவசாய நிலங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன..? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி!

தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லாததைக் கண்டித்து இந்தியாக கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

விளம்பரம்

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் வரும் 27 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் இந்த முடிவை அறிவித்துள்ளது. பட்ஜெட்டில் காங்கிரஸ் மாநிலங்கள் புறக்கணிப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
CM MK Stalin

You may also like

© RajTamil Network – 2024