Sunday, September 29, 2024

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரம்… 3 முதியவர்கள் கைது

by rajtamil
0 comment 33 views
A+A-
Reset

13 வயது சிறுமியை 3 முதியவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 21-ந் தேதி பள்ளி விடுமுறை என்பதால் அந்த சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அவரது தாய் கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.

பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, அவரது வீட்டிற்கு சிலர் வந்து சென்றதாகவும், அது பற்றி சிறுமியிடம் விசாரிக்கும்படியும் அக்கம், பக்கத்தினர் கூறியுள்ளனர். இது பற்றி சிறுமியின் தாய், அவரிடம் விசாரித்துள்ளார்.

அப்போது ராஜேந்திரன் (வயது 65), பன்னீர்செல்வம் (76), சின்னத்தம்பி (70) ஆகியோர் தன்னை மிரட்டி, மாறி, மாறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அந்த சிறுமி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

அதன்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், பன்னீர்செல்வம், சின்னத்தம்பி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சின்னத்தம்பி பன்னீர்செல்வத்தின் தம்பி ஆவார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

You may also like

© RajTamil Network – 2024