Saturday, September 21, 2024

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி மந்திரி படித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது – ப.சிதம்பரம்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

புதுடெல்லி,

2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று காலை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்தநிலையில் மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை. அகில இந்திய அளவில் வேலையில்லா திண்டாட்டம் 9.2% என்ற அளவில் உள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி மந்திரி படித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விலைவாசி உயர்வு என்பது மற்றொரு மிகப்பெரிய சவாலாகவும், கவலையாகவும் உள்ளது. சவாலாக இருக்கும் விலைவாசி உயர்வுக்கு ஜிடிபி வளர்ச்சி எந்த விதமான பதிலையும் வழங்கவில்லை.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வாசித்து பட்ஜெட்டில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இளைஞர்களுக்கு பயிற்சி, ஏஞ்சல் வரி ஒழிப்பு உள்ளிட்டவை காங்கிரஸ் அறிக்கையில் இடம்பெற்றவை. மாணவர்கள் செலுத்தாத கல்விக்கடன் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பின்மையை போக்க அறிவிப்புகள் குறைவாகவே உள்ளன என்றார்.

You may also like

© RajTamil Network – 2024