மும்பை கிரிக்கெட் சங்க தலைவராக அஜிங்யா நாயக் தேர்வு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

மும்பை கிரிக்கெட் சங்க தலைவராக அஜிங்யா நாயக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அமோல் காலே, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்த போது மரணம் அடைந்தார். இதையடுத்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது.

இதில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவரும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான சரத்பவாரின் ஆதரவாளர் அஜிங்யா நாயக் 221-114 என்ற ஓட்டு வித்தியாசத்தில் சஞ்சய் நாயக்கை வீழ்த்தி மும்பை கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 37 வயதான அஜிங்யா, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் இளம் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

Heartiest Congratulations to Mr. Ajinkya Naik who has been elected as the President of the Mumbai Cricket Association in the MCA elections held today #MCA#Mumbai#Cricket#Wankhede#BCCI | @ajinkyasnaikpic.twitter.com/dXX6Ok64q4

— Mumbai Cricket Association (MCA) (@MumbaiCricAssoc) July 23, 2024

You may also like

© RajTamil Network – 2024