மழை பெய்து வருவதால் கர்நாடகா தண்ணீர் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – தமிழக அரசு

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 32-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு

தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீரை மாதந்தோறும் கர்நாடக அரசு வழங்க வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் வலியுறுத்தினோம். இதனை ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். மழை பெய்து வருவதால் தண்ணீர் வழங்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஆகஸ்ட் மாதத்துக்கான 45 டி.எம்.சி தண்ணீர் திறக்க தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தினோம். காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் ஜூலை 30-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கு 45 டி.எம்.சி தண்ணீர் திறப்பது குறித்து அப்போது முடிவெடுக்கப்படும் என்று ஆணையம் அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

#JUSTIN || “தமிழகத்திற்கான உரிய நீரை மாதந்தோறும் வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம்”
“தமிழகத்திற்கான நீரை வழங்க கூட்டத்தில் வலியுறுத்தினோம்”
“மழை பெய்து வருவதால் தண்ணீர் வழங்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை”
தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் #Delhi#CauveryIssue… pic.twitter.com/ykXPkfk9W5

— Thanthi TV (@ThanthiTV) July 24, 2024

You may also like

© RajTamil Network – 2024