சிக்கிமிற்கு சுற்றுலா செல்ல திட்டமா..? இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

சிக்கிமிற்கு சுற்றுலா செல்ல திட்டமா..? அப்ப கண்டிப்பா இந்த விஷயத்தை தெரிஞ்சிட்டு போங்க!சிக்கிமிற்கு சுற்றுலா செல்ல திட்டமா..? அப்ப கண்டிப்பா இந்த விஷயத்தை தெரிஞ்சிட்டு போங்க!

சிக்கிமிற்குள் நுழையும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் இனி ஒரு பெரிய குப்பை பையை கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சமூகத்தின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் நீண்ட காலமாக பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. காங்டாக் சென்றால் போதும் அந்த கண்டிப்பை நீங்கள் உணரலாம். மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது கூட அங்கு கடினமாக இருக்கும். சிக்கிம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க பல ஆண்டுகளாக மாநில நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான மற்றொரு படியாக ஒரு புதிய உத்தரவை அறிவித்துள்ளது.

விளம்பரம்

அதன்படி சிக்கிமின் சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையானது, இனிமேல் சுற்றுலா பயணிகளுடன் வாகனம் சிக்கிமுக்குள் நுழைந்தால், அவர்கள் குப்பை பைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுலா பயணிகள் சாலைகளில் கார் கண்ணாடிகளை தாழ்த்தி குப்பைகளை எங்கும் வீசக்கூடாது என்பதே சிக்கிம் அரசின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும்.

சுற்றுலாப் பயணிகள் குப்பைகளை வீசுவதற்குப் பையைப் பயன்படுத்துவதை சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்பவர்களோ அல்லது வாகன ஓட்டியோ அல்லது அதற்குப் பொறுப்பான ட்ராவல் ஏஜென்டோ உறுதி செய்ய வேண்டும் என்றும் சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சிக்கிம் அரசு கூறியுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
2 ஆண்டுகளாக கப்பலில் வாழும் இளம்பெண்… என்ன காரணம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா இல்லையா என்பதை சரிபார்க்க சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சிக்கிமுக்கு வரும் அனைத்து வாகனங்களும் அவ்வப்போது கண்காணிக்கப்படும். மேலும் இந்த விதியை கடைபிடிக்கவில்லை என்றால், அந்த வாகனத்தின் ஓட்டுநருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:
கடலில் போதையில் உலாவும் சுறாக்கள் – விஞ்ஞானிகள்அதிர்ச்சி!

விளம்பரம்

மலை மாநிலமான சிக்கிம் அதன் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையையே பெரிதும் நம்பியுள்ளது. பெங்காலி சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சிக்கிம் நகருக்கு வந்து செல்கின்றனர். இந்தியாவின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமான சிக்கிமில் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் இயற்கை எழில் கொஞ்சும் இமய மலை உள்ளிட்ட இடங்களை காண ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Plastic Ban
,
Sikkim

You may also like

© RajTamil Network – 2024