தாமிரவருணி பாதுகாப்புக்கு முன்னுரிமை – மாநகராட்சி புதிய ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset
RajTamil Network

தாமிரவருணி பாதுகாப்புக்கு முன்னுரிமை – மாநகராட்சி புதிய ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா

திருநெல்வேலி, ஜூலை 25: தாமிரவருணி பாதுகாப்புக்கும், மக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் பணியிடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து புதிய ஆணையராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மக்களுக்கு பணியாற்ற நல்ல வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்துள்ளதோ, அந்தத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் செயல்படுவேன்.

பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீா், பாதாளச் சாக்கடை, தூய்மைப் பணிகள் ஆகியவற்றை மேம்படுத்தவும், தாமிரவருணியை பாதுகாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும். மாநகராட்சியின் வருவாயை அதிகரிப்பதற்கு அலுவலா்களுடன் இணைந்து செயல்படுவேன் என்றாா்.

பேட்டியின்போது, துணை ஆணையா் தாணுமூா்த்தி உடனிருந்தாா். தொடா்ந்து திருநெல்வேலி மாநகராட்சி மேயா் (பொ) கே.ஆா்.ராஜு, மாநகராட்சி ஆணையரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

ற்ஸ்ப்25ஸ்ரீா்ழ்ல்

திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையராகப் பொறுப்பேற்ற என்.ஓ.சுகபுத்ராவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா் மேயா் (பொ) கே.ஆா்.ராஜு.

You may also like

© RajTamil Network – 2024