திமுகவிற்கு எதிராக பேசிய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

திமுகவிற்கு எதிராக பேசிய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்… விளக்கம் கேட்டது டெல்லி கட்சி மேலிடம்!காங்கிரஸ்

காங்கிரஸ்

தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிராக பேசிய காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விளக்கம் பெற்று அறிக்கை அளிக்குமாறு, மேலிட பொறுப்பாளருக்கு காங்கிரஸ் தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களால் கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் அதிக காலம் கூட்டணியாக இணைந்திருந்தவை திமுகவும், காங்கிரஸும். 2004, 2009, 2019, 2024 என 4 நாடாளுமன்றத் தேர்தல்களிலும், 2006, 2011, 2016, 2021 என 4 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் திமுக – காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டன. இடையே 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் தனித்தனியாக களமிறங்கின.

விளம்பரம்

இவ்வாறு, 2004-இல் காங்கிரஸின், தேசிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த திமுக, தற்போது உள்ள இந்தியா கூட்டணியிலும் முதன்மையான கட்சியாக உள்ளது. இதனால், தேசிய அளவிலும், தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ஆதரவு அவசியமாக இருக்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை நிறுவோம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார். இது பேசுபொருளாகி சற்று ஓய்ந்த நிலையில், சமீபத்தில், சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் பேச்சு கனலை பற்றவைத்தது.

விளம்பரம்

மேலும் சில காங்கிரஸ் நிர்வாகிகளும் திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமாரிடம், கட்சித் தலைமை விளக்கம் கேட்டுள்ளது. யாரெல்லாம் திமுகவிற்கு எதிராக பேசினார்களோ அவர்கள் அனைவரிடமும் விளக்கம் பெற்று அறிக்கை அளிக்க காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகிகளின் விமர்சனத்தில் தவறில்லை என கூறினார். தேர்தலின்போது காங்கிரஸ் – திமுக என இரு கட்சிகளுக்கும் பரஸ்பரம் ஆதரவு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

இதையும் படிங்க: ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான சிறந்த வழி – அமெரிக்க அதிபர் ஜோபைடன் உருக்கம்!

காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் என யார் என்ன பேசினாலும், கூட்டணிக்கு எதுவும் ஆகாது என்றே கருதுவதாகவும் பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Congress
,
DMK

You may also like

© RajTamil Network – 2024