Friday, September 20, 2024

வயதான தம்பதிக்கு ரூ.10,000 உடன் ரீஃபண்ட்.. ரயில்வே வழங்கியது ஏன்?

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

வயதான தம்பதிக்கு ரூ.10,000 உடன் ரீஃபண்ட்.. ரயில்வே வழங்கியது ஏன்?வயதான தம்பதிக்கு ரூ.10,000 உடன் ரீஃபண்ட்.. ரயில்வே வழங்கியது ஏன்?

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் சண்டிகர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம் ரயில் டிக்கெட் ரீஃபண்ட் தொகை மறுக்கப்பட்ட ஒரு தம்பதிக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் சண்டிகர் (IRCTC) மற்றும் இந்தியன் ரயில்வே துறை 10,000 ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.ஒரு சில தொழில்நுட்ப காரணங்களுக்காக ரயிலானது கூர்குவான் ரயில் நிலையத்திற்கு வராமல் திருப்பிவிடப்பட்டதால் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

மீடியாவில் வெளியான அறிக்கைகளின் படி, சண்டிகரை சேர்ந்த பார்டெண்டு சூத் மற்றும் அவருடைய மனைவி நீலா சூத் ஆகிய இருவரும் டிசம்பர் 13, 2022 அன்று கூர்குவானில் இருந்து சண்டிகர் செல்வதற்கு நவம்பர் 29, 2022 அன்று இரண்டு ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு டிக்கெட்டுகளுக்கான கட்டணம் 477.70 ரூபாயாகும். ஸ்டேஷனை சென்றடைந்தபோது, ஒரு சில தொழில்நுட்ப காரணங்கள் கருதி, ரயிலானது கூர்குவான் ரயில் நிலையத்திற்கு வராது என்ற ஒரு மெசேஜை அவர்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அந்த தம்பதி பெற்றுள்ளனர். அதனை அடுத்து அந்த தம்பதி சண்டிகருக்கு பேருந்தில் பயணித்துள்ளனர்.

விளம்பரம்

ஒரு வாரம் கழித்து சூத் IRCTC ரீஃபண்ட் கேட்டு கோரிக்கை அனுப்பியுள்ளார். எனினும் 72 மணி நேரத்திற்கு உள்ளாக போர்டிங் ஸ்டேஷனில் இருந்து விண்ணப்பிக்காத காரணத்தால் அவர்களுக்கு ரீஃபண்ட் வழங்க முடியாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. சீனியர் சிட்டிசன்களாக இருப்பதால் புகார்தாரர்களால் கூர்குவான் ஸ்டேஷனில் இருந்து ரீஃபண்ட் தொகைக்கு விண்ணப்பிப்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும், மேலும் அவர்கள் உடனடியாக அங்கிருந்து பேருந்து மூலமாக சண்டிகர் செல்ல வேண்டி இருந்தது என்றும் வாக்குவாதம் செய்தனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
8 கி.மீ. தூரம் ஓடி கொலையாளியை கண்டுபிடித்த போலீஸ் மோப்ப நாய்! – கர்நாடகாவில் நடந்த அதிரடி சம்பவம்!

ரயில்வே பயணிகள் முன்பதிவு அமைப்புக்கான அணுகலை மட்டுமே தங்களால் தர முடியும் என்றும், ரயில் திசை திருப்பப்படும் விஷயங்களில் இவர்களால் தலையிட முடியாது என்றும் IRCTC கூறியுள்ளது. மறுபுறம், இந்தியன் ரயில்வே இந்த புகாருக்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தது.

விளம்பரம்

ஆனால் எலக்ட்ரானிக் ரிசர்வேஷன் ஸ்லிப்பில் ரயில் டிக்கெட்டுகளுக்கு 17.70 கண்வினியன்ஸ் கட்டணம் விதிப்பதாகவும், இந்தியன் ரயில்வே 460 ரூபாய் விதிப்பதாகவும் கமிஷன் கண்டுபிடித்தது. குறிப்பிட்ட அந்த தேதியில் ரயில் கூர்குவானில் நிறுத்தாதது புகார்தாரர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரித்தை ஏற்படுத்தியதாக வாதாடப்பட்டது.

இதையும் படிக்க:
நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நீடா அம்பானி… சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ஒருமனதாக தேர்வு…

இதன் காரணமாக சேவையில் ஏற்பட்ட இந்த குறைபாட்டுக்கு IRCTC மற்றும் இந்தியன் ரயில்வே முழு பொறுப்பு என்பதை கமிஷன் உறுதிப்படுத்தியது. மேலும் IRCTC, சண்டிகர் மற்றும் இந்தியன் ரயில்வே ஆகிய இருவரும் சண்டிகரிலுள்ள ரயில்வே ஸ்டேஷன் மேனேஜர் மூலமாக புகார்தாரர்களுக்கு 477.70 ரூபாயை ரீஃபண்ட் ஆகவும், டிசம்பர் 13, 2022 முதல் 9 சதவீத வட்டி கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. கூடுதலாக, புகார்தாரர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் செலவுகள் ஆகியவற்றை ஈடு செய்ய 10,000 ரூபாய் தொகை வழங்கக்கோரி உத்தரவிட்டது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indian Railways

You may also like

© RajTamil Network – 2024