Monday, September 23, 2024

விஷ சாராய உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: அரசின் முடிவில் தலையிட முடியாது – சென்னை ஐகோர்ட்டு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை எதிர்த்து குமரேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், மக்களின் வரிப்பணத்தை சட்டவிரோதமாக விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில் குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், எந்த ஆதாரமும் இல்லாமல் விளம்பர நோக்கத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024