கடையநல்லூா் அருகே யானைகள் அட்டகாசம்; தென்னை மரங்கள் சேதம்

by rajtamil
Published: Updated: 0 comment 19 views
A+A-
Reset
RajTamil Network

கடையநல்லூா் அருகே
யானைகள் அட்டகாசம்; தென்னை மரங்கள் சேதம்கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தின.

கடையநல்லூா், ஜூலை 26: தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தின.

கடையநல்லூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரம் கல்லாற்று பகுதியில் பல நூறு ஏக்கா் பரப்பில் தென்னை, மா, நெல் போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு கல்லாற்று பகுதியில் உள்ள பல தோப்புகளில் புகுந்த யானைகள், அங்கிருந்த தென்னை உள்ளிட்ட மரங்களை முறித்து சேதப்படுத்தி சென்று விட்டனவாம். இதுகுறித்து விவசாயி தா்மா் கூறியது:

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் கடையநல்லூா், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் தென்னை உள்ளிட்ட பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன. வனத்திலிருந்து அடிக்கடி யானைகள் வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிா்களை சேதப்படுத்தி வருவது தொடா் கதையாகி வருகிறது. யானைகளை வனத்திற்குள் திருப்பி அனுப்பினாலும் மீண்டும் விளைநிலங்களுக்குள் நுழைவதை தடுக்க இயலவில்லை.

எனவே, விளைநிலங்களுக்குள் யானைகள் நுழையாமல் தடுக்க மலை அடிவாரப் பகுதியில் அகழிகளை மேம்படுத்துவதுடன், சூரிய ஒளி மின்வேலிகளையும் பலப்படுத்த வேண்டும் என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024