Sunday, September 22, 2024

சர்வதேச டி20 கிரிக்கெட்; விராட் கோலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.

பல்லகெலே,

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 214 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வாங்கியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.

அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய வீரர் என்ற விராட் கோலியின் (16 முறை) சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய வீரர்கள்:

1. சூர்யகுமார் யாதவ் (16 முறை – 69 ஆட்டம்)

2. விராட் கோலி (16 முறை – 125 ஆட்டம்)

3. சிக்கந்தர் ராசா (15 முறை – 91 ஆட்டம்)

4. முகமது நபி (14 முறை – 129 ஆட்டம்)

5. ரோகித் சர்மா (14 முறை – 159 ஆட்டம்)

6. விரந்தீப் சிங் (14 முறை – 78 ஆட்டம்)

You may also like

© RajTamil Network – 2024