Saturday, September 21, 2024

தியேட்டரில் ராயன் படத்தை செல்போனில் பதிவு செய்த மதுரையை சேர்ந்தவர் கைது

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

திருவனந்தபுரம் தியேட்டரில் ராயன் படத்தை செல்போனில் பதிவு செய்த மதுரையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்,

தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றன.

தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ள ராயன் படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஒடியது. தனுஷின் முந்தைய படங்களான கேப்டன் மில்லர், கர்ணன், வாத்தி ஆகிய திரைப்படங்களை ஒப்பிடும் பொழுது ராயன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், திருவனந்தபுரம் தியேட்டரில், நடிகர் தனுஷின் ராயன் படத்தை செல்போனில் பதிவு செய்த மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரள சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஸ்டீபன் ராஜ் புதுப்படங்களை செல்போனில் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றும் கும்பலை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே தியேட்டரின் இருக்கையில் சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்து ஒரு படத்திற்கு ரூ.5,000 கமிஷன் பெற்று இணையதளத்தில் ஸ்டீபன் ராஜ் பதிவேற்றம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024