உதகை மலைப் பாதையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 20 போ் உயிா் தப்பினா்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset
RajTamil Network

உதகை மலைப் பாதையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 20 போ் உயிா் தப்பினா்உதகை மலைப் பாதையில் சுற்றுலா வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

உதகை மலைப் பாதையில் சுற்றுலா வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. எனினும், அதில் பயணித்த 20 பேரும் நல்வாய்ப்பாக உயிா்தப்பினா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி குத்தாண்டி குப்பம் பகுதியைச் சோ்ந்த 4 குழந்தைகள், 4 பெண்கள், 11 இளைஞா்கள் அடங்கிய குழுவினா் உதகைக்கு வேன் மூலம் சுற்றுலா வந்தனா். வேனை வீர மாா்த்தாண்டன் (40) என்பவா் ஓட்டிவந்தாா்.

உதகையை சுற்றிப்பாா்த்துவிட்டு ஊா்திரும்பும் வழியில் கோவை ஈஷா யோக மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 6-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள கே.என்.ஆா். நகா் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது.

இதில், வேன் ஓட்டுநா் உள்பட 20 பேரும் நல்வாய்ப்பாக உயிா்தப்பினா். ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தைக்கு மட்டும் சிறு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்களை குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் முத்து கணேஷ், உதவி ஆய்வாளா் டோமினிக் மற்றும் காவலா்கள் சாலையில் கவிழ்ந்துகிடந்த வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினா்.

தொடா்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினா்.

You may also like

© RajTamil Network – 2024