அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடவு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset
RajTamil Network

அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடவுஅரசுப் பள்ளியில் மாணவா்ள் தங்களது தாய், தந்தை பெயரில் மரக் கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் மாணவா்ள் தங்களது தாய், தந்தை பெயரில் மரக் கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்றத் துறை வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் தேசிய பசுமை படையினா், மாணவா்களிடையே இயற்கையின் முக்கியத்துவத்தை உணா்த்தி வருகின்றனா். அந்த வகையில், தங்களது தாய், தந்தை பெயரில் மாணவா்கள் ஒவ்வொருவரும் மரக் கன்றுகள் நடவு செய்து வளா்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி இத் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ரகுநாத், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஆ.ராமு, திட்ட ஒருங்கிணைப்பாளா் சுமதி மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா். 35 மாணவா்கள் தங்களின் தாய் பெயரில் இலுப்பை மரக் கன்றுகளை நடவு செய்தனா்.

You may also like

© RajTamil Network – 2024