Friday, September 20, 2024

தைவானில் சர்வதேச மாநாடு : 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

by rajtamil
0 comment 30 views
A+A-
Reset

தைவானை தனது நாட்டின் ஒரு அங்கம் என கருதும் சீனா அதனை மீண்டும் இணைத்துக்கொள்ள துடிக்கிறது.

தைபே சிட்டி,

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தனது நாட்டின் ஒரு அங்கம் என கருதும் சீனா அதனை மீண்டும் இணைத்துக்கொள்ள துடிக்கிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்களை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் வேறு எந்த நாடுகளும் தைவானுடன் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் அடுத்த வாரம் சர்வதேச உச்சிமாநாடு தைவானில் நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பொலிவியா, கொலம்பியா, சுலோவேக்கியா உள்பட 6 நாடுகளுக்கு சீனா ஒரு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் தைவான் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என சீனா தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்வார்களா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024