Saturday, September 21, 2024

பிகார் அரசின் 65% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

பிகார் அரசு கொண்டுவந்த 65 % இடஒதுக்கீடுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்க கோரிய வழக்கு : உச்சநீதிமன்றம் மறுப்புபிகார் இடஒதுக்கீடு வழக்கு

பிகார் இடஒதுக்கீடு வழக்கு

பிகாரில் 65 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பிகாரில் அரசு வேலை, உயர்க்கல்வி உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு 50 விழுக்காடாக உள்ளது. அண்மையில் நடந்த சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை 65 விழுக்காடாக உயர்த்த அம்மாநில அரசு முடிவெடுத்தது. இந்த முடிவுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 20ஆம் தேதி தடை விதித்தது.

பாட்னா உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிகார் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விளம்பரம்இதையும் படிங்க : 50% இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் பீகார் அரசு.. நாட்டையே திரும்பி பார்க்க வைத்ததன் காரணம் என்ன?

அப்போது பிகார் அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிட்டார். குறிப்பாக சத்தீஸ்கரில் இதே பாணியில் உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியதை சுட்டிக்காட்டி வாதிட்டார்

இதனை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, உயர்நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bihar
,
reservation
,
Supreme court

You may also like

© RajTamil Network – 2024