சில தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி – தமிழக அரசு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

குழந்தை பிறந்த முதல் மாதத்தில் இருந்து 18 வயது வரை செலுத்தப்படும் 16 தடுப்பூசிகளை, குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம்,, "தனியாரை பொறுத்தவரை தற்போது ஒரு அரசாணையை பிறப்பித்துள்ளோம். அதன்படி, குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசியை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். இவற்றுடன் பொதுமக்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தால் அதன் அடிப்படையில் சில மையங்கள் திறக்கப்படும். விரைவில் அறிவிப்புகள் வெளியாகும். முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தை போல இதில் பயன்பெற முடியும்" என்று அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024