வயநாடு நிலச்சரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் பலி : முதலவர் இரங்கல்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

வயநாடு நிலச்சரிவு : தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் பலி – முதலமைச்சர் அறிவித்த நிவாரணம்கேரளாவில் தமிழர்கள் உயிரிழப்பு

கேரளாவில் தமிழர்கள் உயிரிழப்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த 34 வயதான காளிதாஸ், கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தார். இந்த சூழலில் சூரல்மலையில் நிகழ்ந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல இந்த நிலச்சரிவில் வயநாட்டில் அர்ச்சகராக பணியாற்றிய நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த கல்யாண குமார் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காளிதாஸின் மறைவு செய்தி அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை

காளிதாஸின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அதேபோல நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்யாண குமார் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் இரங்கல் மற்றும் நிதி உதவி மூன்று லட்சம் ரூபாய் கல்யாண்குமார் குடும்பத்திற்கு நிவாரணமாக அறிவித்துள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
CM MK Stalin
,
kerala
,
Wayanad

You may also like

© RajTamil Network – 2024