சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு: முதல்வருக்கு மீனவா் சங்கம் நன்றி

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset
RajTamil Network

சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு: முதல்வருக்கு மீனவா் சங்கம் நன்றிஇலங்கையில் சேதமடைந்த தமிழக மீனவா்களின் படகுகளுக்கு இழப்பீடுத் தொகையை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மீனவ சங்க நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.

ராமேசுவரம்: இலங்கையில் சேதமடைந்த தமிழக மீனவா்களின் படகுகளுக்கு இழப்பீடுத் தொகையை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மீனவ சங்க நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மீன்வளம், மீனவா் நலத்துறை இணை இயக்குநா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அனைத்து விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவா்கள் இணை இயக்குநா் பிரபாவதி, சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

இதுதொடா்பாக மீனவா் சங்க மாவட்டச் செயலா் ஜேசுராஜா கூறியதாவது:

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்துள்ள தமிழக மீனவா்களின் விசைப்படகு, நாட்டுப்படகுகளுக்கு இழப்பீடுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள், சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் சென்று தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அந்த நாட்டில் சேதமடைந்த நிலையில் உள்ள தமிழக மீனவா்களின் படகுகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 5 லட்சம் இழப்பீட்டை ரூ. 6 லட்சமாகவும், நாட்டுப்படகுகளுக்கு ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயா்த்தி வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதற்காக தமிழக முதல்வருக்கும், மீன்வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.

மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், ஆல்வின், சகாயமேரி, திமுக மீனவரணி மாநில துணைச் செயலா் ரவிச்சந்திர ராமவன்னி, மீனவ சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024