வயநாடு நிலச்சரிவு : பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

வயநாடு நிலச்சரிவின் பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு – 2 வது நாளாக தொடரும் மீட்புப்பணிவயநாடு நிலச்சரிவு

வயநாடு நிலச்சரிவு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் , இயற்கையின் கோரதாண்டவத்தால் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151-ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் நேற்று முன் தினம் நள்ளிரவு சுற்றுலாத்தலமான முண்டக்கை கிராமத்தின் அருகில் உள்ள மலையில் கடும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதே வேகத்தில் அது முண்டக்கை கிராமத்தின் மீது விழுந்து அழுத்தியது.

அத்துடன் நில்லாமல் அதே வேகத்தில் சூரல்மலை பகுதியை நோக்கி சென்றது. அங்கு நிவாரண முகாமாக செயல்பட்டு வந்த பள்ளி அருகே காலை 4 மணி அளவில் நிலம் சரிந்து , மக்கள் நிர்கதியாகினர். முகாமாக செயல்பட்ட இந்த பள்ளியும், அருகே இருந்த ஏராளமான வீடுகளும், கடைகளும் மண்ணிலும், சேற்றிலும் மூழ்கின.

விளம்பரம்

அட்டமலா – முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம் நிலச்சரிவில் சேதமடைந்ததால், மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதியை சென்றவடைவதில் கடும் சவால் ஏற்பட்டது.

இதையும் படிக்க:
கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை

மேப்பாடி பகுதியும் நிலச்சரிவால் கடும் பாதிப்புக்கு உள்ளானது. நள்ளிரவு தொடங்கிய 4 மணி நேரத்திற்குள் நடந்த இயற்கை பேரிடரின் கோரதாண்டவத்தில் சிக்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மண்ணில் புதைந்தும் மாண்டனர்.

விளம்பரம்

சாலைகள் துண்டிப்பு, அவ்வப்போது குறுக்கிட்ட மழையாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்களை கொண்டு செல்வது மீட்புக் குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்தது.

இடிபாடுகளிலும், சேற்றிலும் சிக்கியவர்கள் கயிறு கட்டியே மீட்கப்பட்டு வந்தனர். சூரல்மலையில் கிரேன் மூலம், கட்டிலில் கட்டி இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

பின்னர் பெரும் முயற்சியின் பலனாக, நேற்று மாலை 6 மணி அளவில் சூரல்மலையை சென்றடைந்தது விமானப்படையின் ஹெலிகாப்டர். தற்காலிக பாலம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சூரல்மலையில் மீட்புப் பணி வேகமெடுத்தது.

குடும்பத்துடன் நீங்கள் பார்க்க வேண்டிய 12 தமிழ் படங்கள்.!
மேலும் செய்திகள்…

நிலச்சரிவில் சிக்கித் தவித்து வந்த ஏராளமானோர், ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கேரள மாநில பேரிடர் மீட்புப் படையின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் ஆம்புன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விளம்பரம்

மேலும் மீட்புப்பணியின் இரண்டாவது நாளாக நேற்று, சூரல்மலை பகுதியில் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் இன்று அதிகாலை முதலே தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சூரல்மலையில் உள்ள சாலியாற்றில் தற்காலிக பாலம் அமைத்து மீட்பு படையினர் ஆற்றை கடந்து சென்றனர்.

முறையான சாலை, வலுவான பாலம் இல்லாததால், மீட்பு பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள், வாகனங்களை கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், ஒரு சில இடங்களுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ராணுவ வீரர்கள் குழுவாக நடந்தே சென்று மக்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையும் இதில் உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை தமிழ்நாடு அரசின் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவ குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர்.

வயநாடு நிலச்சரிவு இதுவரை 150-ற்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்ததுடன், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி, ஆறாத வடுவாக மாறிவிட்டது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kerala
,
Landslide
,
Landslide Death
,
Wayanad

You may also like

© RajTamil Network – 2024