Saturday, September 21, 2024

கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

தஞ்சை,

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், நீர் வரத்து அதிகரிப்பை தொடர்ந்து தற்போது அணையில் இருந்து 1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு இன்று (புதன்கிழமை) அதிகாலை வந்து சேர்ந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் திறந்து வைத்து தண்ணீரில் நெல் மணிகள் மற்றும் மலர் தூவினர். இந்த நிகழ்ச்சியில் டெல்டா மாவட்ட கலெக்டர்கள், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கல்லணையில் இருந்து வினாடிக்கு 3,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பின் மூலம் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து சம்பா சாகுபடி பணிகளை டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024