Saturday, September 21, 2024

காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் – உலக சுகாதார அமைப்பு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்றுநோய் கிருமிகள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

காசா,

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகிறார்கள், இந்த நிலையில், காசாவில் குழந்தைகள் போலியாவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் செய்திதொடர்பாளர் கூறும்போது, காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் கிருமிகள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்புகிறது. தடுப்பூசிகள் குழந்தைகளை சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை என்றார். காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறும்போது, போலியோ தொற்றுநோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

You may also like

© RajTamil Network – 2024