Saturday, September 21, 2024

நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை – சூர்யகுமார்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.

பல்லகெலே,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 3வது டி20 போட்டி நேற்று பல்லகெலேவில் நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இரு அணிகளின் ரன்களும் சமனில் இருந்ததால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. சூப்பர் ஓவரில் இலங்கை 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா முதல் பந்திலேயே 4 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கையை சூப்பர் ஓவரில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது,

இந்த தொடருக்குமுன்பே நான் கூறியதுதான், நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை. நான் ஒரு தலைவனாக இருக்க விரும்புகிறேன். இந்திய வீரர்கள் அதிக அளவு திறமையும், தன்னம்பிக்கையும் வைத்துள்ளனர். இதனால் எனது வேலை சுலபமானது. 2வது டி20 போட்டிக்குப்பின்னர் 3வது டி20 போட்டியில் பங்கேற்கமாட்டீர்கள் என சில வீரர்களிடம் கூறினேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் எனது வேலையை சுலபமாக்கினர். நான் பேட்டிங் செய்யும்போது எனக்கு சிறு அழுத்தம் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024