சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா.. இவர்கள் எல்லாம் மலை ஏறுவதை தவிருங்கள்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

ஆடி அமாவாசை விழாவிற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுநகர்:

வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வருகிற 4-ந் தேதி ஆடி அமாவாசை விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுவாமிக்கு பல்வேறு வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும். இதையொட்டி சதுரகிரி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அமாவாசை தினத்தன்று சாமி தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு வருவார்கள். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே சுந்தரமகாலிங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதய நோயாளிகள், சுவாச பிரச்சினை உள்ளவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்த நோயாளிகள், அல்சர் நோயாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், கால் ஊனமுற்றோர்கள், மிகவும் வயதானவர்கள், ரத்த சோகை உள்ளவர்கள் யாரும் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024