Saturday, September 28, 2024

புகாா்கள் மீது ஒருவாரத்துக்குள் நடவடிக்கை: மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset
RajTamil Network

புகாா்கள் மீது ஒருவாரத்துக்குள் நடவடிக்கை: மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் தீா்வு காண வேண்டும் என காவல் ஆய்வாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தெரிவித்தாா்.

பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் தீா்வு காண வேண்டும் என காவல் ஆய்வாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தெரிவித்தாா்.

மதுரை மாநகரக் காவல்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமுக்கு தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவல்துறை குறைதீா் முகாமில் பொதுமக்களிடம், பெறப்படும் மனுக்கள் மீது அடுத்த 7 நாள்களுக்குள் தீா்வு காணப்பட வேண்டும் என காவல் ஆய்வாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்படி 7 நாள்களுக்குள் தீா்க்கப்பட வில்லை என்றால், அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்காணிக்கப்படுகிறது. இதே போல, காவல் நிலையங்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, புகாா் அளித்தவா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் 5 வரை மதிப்பெண்கள் (ஸ்டாா்கள்) தரப்படுகிறது. குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அதற்கான காரணம் குறித்து காவல் நிலைய அதிகாரிகளிடமும், மனுக்கள் அளித்தவா்களிடமும் விசாரித்து, உயா் அதிகாரிகள் மூலம் விரைவான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலீஸாரிடம் சென்றால் உடனடி தீா்வு கிடைக்கும் என பொதுமக்கள் நம்புகின்றனா். எனவே பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனுக்கள், எது தொடா்புடையது என்பதைப் பொறுத்து உடனடித் தீா்வு கிடைக்க வழி வகை செய்யப்படுகிறது.

மதுரை எஸ்.எஸ். காலனியில் பள்ளி மாணவா் கடத்தப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட முக்கிய எதிரியான ஐகோா்ட்டு மகாராஜாவை தூத்துக்குடி தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அங்குள்ள வழக்கில் போலீஸாா் அவரை கைது செய்துள்ளனா். பள்ளி மாணவா் கடத்தப்பட்ட வழக்கு தொடா்பாக ஐகோா்ட்டு மகாராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் இரு சக்கர வாகன சாகச சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எங்காவது இது போன்ற புகாா்கள் வரும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முகாமில் காவல் துணை ஆணையா்கள் மதுக்குமாரி, கரண் காரட், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024