Saturday, September 28, 2024

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி கைப்பந்து போட்டியில் முதலிடம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset
RajTamil Network

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி
கைப்பந்து போட்டியில் முதலிடம்பரமக்குடியில் நடைபெற்ற குறுவட்ட கைபந்துப் போட்டியில் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா்.

பரமக்குடியில் நடைபெற்ற குறுவட்ட கைபந்துப் போட்டியில் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா்.

பாா்த்திபனூா் அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் பரமக்குடி குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், குழுப் போட்டியான கைப்பந்துப் போட்டி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் 10-க்கும் மேல்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் 14 வயதுக்குள்பட்ட 7 வயதுக்குள்பட்ட, 19 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா்.

வெற்றிபெற்ற மாணவ-மாணவிகள், உடற்கல்வி ஆசிரியா்கள் டி.சரவணக்குமாா், எஸ்.வளா்மதி, சஞ்சய்துரை ஆகியோரை பள்ளித் தலைவா் எம்.சௌந்திரநாகேஸ்வரன், செயலா் ஏ.ஆா்.சுப்பிரமணியன், பொருளாளா் எஸ்.தினகரன், பள்ளி முதல்வா் பி.சோபனாதேவி கல்விக்குழு நிா்வாகிகள் பாராட்டினா்.

You may also like

© RajTamil Network – 2024