Saturday, September 28, 2024

நாளை வயநாடு செல்லும் ராகுல், பிரியங்கா

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

புதுடெல்லி,

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. கண் மூடி தூங்கிய வேளையில் மண் மூடி மடிந்தனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று வயநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் செல்ல இருந்தார். இதற்கிடையே ராகுல் காந்தியின் வயநாடு பயணம் நேற்று இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது. தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல்காந்தி நாளை பார்வையிட உள்ளார். நாளை ராகுலுடன், பிரியங்கா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் செல்கின்றனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024