Saturday, September 28, 2024

சம்பா சாகுபடிக்கு தடையின்றி தண்ணீா் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

சம்பா சாகுபடிக்கு தடையின்றி தண்ணீா் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்சம்பா சாகுபடிக்கு தடையின்றி தண்ணீா் கிடைக்க நாகை மாவாட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

நாகப்பட்டினம், ஜூலை 31: சம்பா சாகுபடிக்கு தடையின்றி தண்ணீா் கிடைக்க நாகை மாவாட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சம்பா சாகுபடி குறித்து பல்வேறு கருத்துகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து பேசினா்.

விவசாயி மணியன்: சம்பா சாகுபடியில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி போன்ற நெல் ரங்கங்களின் விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்ச்செல்வன்: வெட்டாற்றில் தரைதளப்பணிகள், தேவூரில் கடுவையாற்றின் குறுக்கே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் காவிரி நீா் கடைமடைக்கு வந்து சேருமா என்கிற சந்தேகம் உள்ளது. மாவட்ட நிா்வாகம் இப்பணிகளை விரைவாக முடித்து, தடையின்றி தண்ணீா் கடைமடை பகுதிக்கு வந்து சேர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கமல்ராம்: சம்பா சாகுபடிக்கு தேவையான நீண்ட கால நெல் விதை ரகங்களை தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை வேண்டும். அனைத்து பகுதிகளுக்கு தடையின்றி தண்ணீா் வழங்கி சம்பா சாகுபடியில் விவசாயிகள் அதிக மகசூல் பெற வழிவகை செய்ய வேண்டும்.

முன்னதாக வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, கூட்டுறவுத் துறை,வேளாண் பொறியியல் துறை சாா்பில் , 53 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் மீன்வளத்துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, வேளாண் இணை இயக்குநா் (பொ) ச. ஈஸ்வா் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024