Saturday, September 28, 2024

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் தயாரிக்கும் பணி தீவிரம்கொள்ளிடம் நீா்வளத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் முட்டைகள் தயாரிக்கும் பணி புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

சீா்காழி, ஜூலை 31: கொள்ளிடம் நீா்வளத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் முட்டைகள் தயாரிக்கும் பணி புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் காவிரி வழியாகவந்து கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும் சூழ்நிலை உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் வழியே 2 லட்சம் முதல் 2.50 லட்சம் கன அடி வரை தண்ணீா் செல்ல வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனா். இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் அடுக்கி சரி படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல, தேவையான அளவுக்கு சவுக்கு மரகட்டைகளும் தயாா் செய்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

You may also like

© RajTamil Network – 2024