Saturday, September 28, 2024

’இன்போசிஸ் நிறுவனம் ரூ.320000000000 வரி ஏய்ப்பு செய்துள்ளது”

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

இன்போசிஸ் நிறுவனம் ரூ.320000000000 வரி ஏய்ப்பு – ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் பரபரப்பு குற்றச்சாட்டுஇன்போசிஸ் நிறுவனம் மீது வரி எய்ப்பு புகார்

இன்போசிஸ் நிறுவனம் மீது வரி எய்ப்பு புகார்

இன்போசிஸ் நிறுவனம் 32 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் பல்வேறு நாடுகளில் கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு கிளைகளில் இருந்து பெற்ற சேவைக்கான ஒருங்கிணைந்த ஜிஸ்டி வரியை இன்போசிஸ் நிறுவனம் பாக்கி வைத்துள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:
ரேன்சம்வேர் தாக்குதல் : நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வங்கிகளின் சேவை முடங்கியது – வாடிக்கையாளர்கள் அவதி

விளம்பரம்

2017-18 முதல் 2021-22 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 32 ஆயிரத்து 403 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்திருப்பதாகவும், இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனத்திற்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இன்போசிஸ் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஜிஎஸ்டி விதிமுறைகளின்படி, இந்திய நிறுவனத்திற்கு வெளிநாட்டு கிளைகள் வழங்கும் சேவைகள் ஜிஎஸ்டிக்கு உட்பட்டது அல்ல என்று இன்போசிஸ் நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
GST
,
Infosys

You may also like

© RajTamil Network – 2024