முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.. திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பிற வாசனை திரவியங்களால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் பிரமாண்டமாக விழா நடைபெற்றது. முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் முருகப் பெருமானை வழிபட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

அவ்வகையில் திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய அம்சமாக, காலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பிற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. மாலையில் திருவீதி உற்சவம் நடைபெற்றது. உற்சவ மூர்த்திகள் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவில் கோவில் நிர்வாகிகள் தேவேந்திர பாபு, சுப்பாராஜு, கிருஷ்ண வர்மா, பாலகிருஷ்ணா மற்றும் பூசாரிகள், பக்தர்கள் என பலர் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024