தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள்: கூடுதலாக 8 மின்சார ரயில் சேவை ரத்து

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள்: கூடுதலாக 8 மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை: தாம்பரம் யார்டில் சிக்னல் மேம்பாட்டு பணி உட்பட பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, ஏற்கெனவே, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 29 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, சில மின்சார ரயில்களின் சேவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பாசஞ்சர் சிறப்புரயில்களின் நேர அட்டவணையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு ஆக.3-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை காலை 7.17, 8.19, 9.00, 9.22, 9.40, 9.50, மாலை 6.26, இரவு 7.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

பாசஞ்சர் சிறப்பு ரயில்: பாசஞ்சர் சிறப்பு ரயில்களின் திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னைகடற்கரை – பல்லாவரத்துக்கு ஆக.3-ம் தேதி முதல் ஆக.14-ம்தேதி வரை காலை 9.30, 9.45,10.00, 10.15, 10.30, 10.45, 11.00, 11.15, 11.30, நண்பகல் 12.00, 12.15, 12.30,12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

பல்லாவரம் – சென்னை கடற்கரைக்கு அதே நாட்களில் காலை10.17, 10.32, 10.47, முற்பகல் 11.02, 11.17, 11.32, 11.47 நண்பகல் 12.02, 12.17, 12.32, 12.47, மதியம் 1.02, 1.17, 1.42, இரவு 11.30, 11.55 ஆகியநேரங்களில் பாசஞ்சர் சிறப்புரயில்கள் இயக்கப்படும்.

தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே ஆக.3-ம் தேதி முதல் ஆக.14-ம்தேதி வரை விரைவு மின்சார ரயில்,சாதாரண மின்சார ரயிலாக இயக்கப்படும்.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு காலை 7.45, 8.05, 8.50 ஆகிய நேரங்களில் சாதாரண மின்சார ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, அரக்கோணம் – சென்னை கடற்கரைக்கு மாலை 5.15 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படும்.

தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு காலை 8.26, 8.39 ஆகியநேரங்களில் மகளிர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும். இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024