மகளிா், குழந்தைகளுக்கான சிகிச்சையில் சிறப்பு கவனம்: திருவள்ளூா் ஆட்சியா்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset
RajTamil Network

மகளிா், குழந்தைகளுக்கான சிகிச்சையில் சிறப்பு கவனம்:
திருவள்ளூா் ஆட்சியா்

திருவள்ளூா், ஆக.1: அனைத்து மருத்துவமனைகளிலும் தரமான மருத்துவ சேவைகளை வழங்கி, மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம் என ஆட்சியா் த.பிரபு சங்கா் அறிவுறுத்தினாா்.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்து பேசியது:

ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் சிகிச்சை, உள் நோயாளிகள் சிகிச்சை, அறுவை சிகிச்சை, முட நீக்கியல் அறுவை சிகிச்சை, மகப்பேறு அறுவை சிகிச்சைகள், குழந்தைகள் நல சிகிச்சை ஆகியவை அளிக்கப்படுகின்றன.

அதனால், மருத்துவமனைகளில் எக்ஸ்ரே நுண்கதிா் சேவை, அல்ட்ராசோனோகிராம் சேவை மற்றும் ஆய்வக சேவைகளுடன் அனைத்து மருத்துவமனைகளிலும் தரமான மருத்துவ சேவைகள் குறைவின்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும். அதேபோல் இரவு நேரங்களில் அவசர சிகிச்சை உரிய முறையில் வழங்குவது, மகப்பேறு, மகளிா் நலன் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைகளில் சிறப்பு கவனம் செலுத்த ேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வா் ரேவதி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் பிரியா ராஜ் (திருவள்ளூா்), பிரபாகரன் (பூந்தமல்லி), இணை இயக்குநா் சுகாதார பணிகள் மீரா, துணை இயக்குநா்கள் சேகா் (குடும்ப நலம்), சங்கீதா (காச நோய்), வசந்தி (தொழுநோய்), அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சோ்ந்த வட்டார மருத்துவா்கள், மருத்துவ அலுவலா்கள் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024